நடிகை ஸ்ருதிஹாசன் காலில் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ஸ்ருதிஹாசன்
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தன் தந்தையை போலவே சினிமாவில் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல டாப் ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.
இருப்பினும் தற்போது தமிழில் பட வாய்ப்புகள் சற்று குறைவாக இருப்பதால் பாலிவுட் மற்றும் டோலிவுட் பக்கம் சென்று விட்டார்.
காயங்களுடன் இருக்கும் புகைப்படம்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன், காலில் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “ஸ்ருதிக்கு என்னாச்சு?..” என விசாரித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.