நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தல், சரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்காமை போன்றவற்றால் உடல் எடை அதிகரித்து அதன் மூலம் பல வகையான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவருகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் சீனி அதிகமுள்ள உணவுப் பொருட்கள், மாவுச் சத்து அதிகமுள்ள உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
மேலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது சிறுநீரகப் பிரச்சினை இருந்தாலோ, அதிகமாக இனிப்புப் பொருட்கள் சாப்பிட்டாலோ உடலில் யூரிக் அமிலம் அதிகமாக சுரக்கும்.
எனவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க, தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
போதுமான அளவு ஓய்வெடுக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகளை உண்டு, போதியளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
மேலும் மஞ்சள் பூசணிக்காய், வாழைப்பழம், புடலங்காய், கெரட், பீர்க்கங்காய், பாகற்காய், எலுமிச்சைச் சாறு, அன்னாசி, சாத்துக்குடி போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.