ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் பிகோ துப்பாக்கிச் சூட்டில் படு காயத்திற்கு உள்ளான நிலையில் படுகொலைக்கு முயற்சித்த குற்றச்சாட்டி ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் விபரம் வெளியிடப்படாதபோதும் அவர் லவிஸ் நகரைச் சேர்ந்த 71 வயது ஆண் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் 59 வயதான பிரதமர் பிகோ மீது பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இது அரசியல் நோக்கம் கொண்ட தாக்குதல் என்று அவரது சகாக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் தாக்குதல்தாரி தனிப்பட்ட முறையில் செயற்பட்டிருப்பதாகவும் அவர் கடந்த காலங்களில் அரச எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றிருப்பதாகவும் உள்துறை அமைச்சர் மாடு சுடாஜ் எஸ்டொக் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை பட்டப்பகலில் ஆதரவாளர் கூட்டம் ஒன்றுக்கு மத்தியில் இருந்த பிரதமர் மீது நெருக்கமான தூரத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரி ஐந்து முறை சுட்டிருப்பதோடு இதில் அவரது வயிறு மற்றும் கைகளில் துப்பாக்கிக் காயம் ஏற்பட்டுள்ளது.