கி ஹர்திக் பாண்டியாவுக்கும், நடாஷா ஸ்டான்கோவிச்சுக்கும் விவாகரத்து உறுதியாகிவிட்டால் எவ்வளவு பணத்தை இழப்பார் பாண்டியா .
ரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும், அவரின் காதல் மனைவியான நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சும் விவாகரத்து பெறப் போவதாக கடந்த மூன்று நாட்களாக பேசப்படுகிறது.
விவாகரத்தின் ஒரு பகுதியாக பாண்டியாவின் சொத்தில் 70 சதவீதம் தனக்கு கொடுக்கப்பட வேண்டும் என நடாஷா கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விவாகரத்து நடந்தால் ஹர்திக் பாண்டியாவின் சொத்தில் எத்தனை கோடி குறையும்.
ஹர்திக் பாண்டியாவின் சொத்துமதிப்பு ரூ. 91 கோடி ஆகும். அதில் 70 சதவீதம் என்றால் ரூ. 63 கோடி நடாஷாவுக்கு போய்விடும். ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் தான் அதிகம் சம்பாதித்திருக்கிறார் பாண்டியா.
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். கிரிக்கெட் தவிர்த்து விளம்பர படங்கள் மூலம் சம்பாதிக்கிறார். ஒரு விளம்பர படத்தில் நடிக்க ரூ. 1 கோடி வாங்குகிறார் பாண்டியா.
ஹர்திக் பாண்டியாவுக்கு விலை உயர்ந்த கார்கள் பிடிக்கும். அவரிடம் லம்போர்கினி, ஆடி ஏ6 உள்ளிட்ட கார்கள் உள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் ரூ. 3.6 கோடிக்கு பென்ட் ஹவுஸ் வைத்திருக்கிறார்.
மேலும் மும்பை பந்த்ரா பகுதியில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவின் அபார்ட்மென்ட்டின் மதிப்பு ரூ. 30 கோடி ஆகும். இது தவிர்த்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வைத்திருக்கிறார் பாண்டியா.
ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார் நடாஷா என பேசப்படுகிறது.
ஆனால் திருமண புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து புகைப்படங்களையும் அப்படியே வைத்திருக்கிறார்.
இந்நிலையில் பாண்டியாவின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு தற்போது பணத்தோடு கிளம்ப பார்க்கிறார் நடாஷா என ரசிகர்கள் விளாசி வருகிறார்கள். விவாகரத்து குறித்து நடாஷாவிடம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்க விரும்பவில்லை.