February 9, 2026
ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டித்தடை..!
Sports

ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டித்தடை..!

May 19, 2024

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டித்தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று (17) பங்கேற்ற தனது இறுதி போட்டியில் குறைந்த பந்துவீச்சு வேகத்தை பேணியதன் காரணமாக இந்த தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதமும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அணியின் ஏனைய வீரர்களுக்கு 12 இலட்சம் இந்திய ரூபாய் அல்லது போட்டி கட்டணத்தில் 50 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை ஐபிஎல் தொடரில் திட்டமிடப்பட்ட 14 போட்டிகளில் 04 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து தடவைகள் ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *