காசா மீது இஸ்ரேல் நடத்தும் தீவிர குண்டு தாக்குதலினால் இஸ்ரேலிய படைகள் ‘காசா நகரை சுற்றி வளைத்துள்ளன.
இதன் காரணமாக தற்போது தெற்கு மற்றும் வடக்கு காசா என இரண்டாக பிரிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதைதொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.
ஹமாஸ் போராளிகளை ஒட்டு மொத்தமாக ஒழிப்போம் என்ற குறிக்கோலுடன் இஸ்ரேல் போரை தொடர்கின்றது.
காசாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்ககுகிறது. இவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை இஸ்ரேல் இராணுவ ஊடகப் பேச்சாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.