முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது நாடாளுமன்ற அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாக அவரால் கடத்தப்பட்டதாக கூறப்படும் அமில பிரியங்கர தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டில் சட்டம் ஒன்று உள்ளது என்பதை ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று புரிந்து கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் நீதிமன்ற வழக்கு ஒன்பது ஆண்டுகளாக இழுத்துச் செல்லப்பட்டமையால் என்னால் சுதந்திரமாக வேலை செய்ய முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்தாலும், தவறு செய்வதற்கு முன் நாட்டில் சட்டம் உள்ளது என்பதை மக்களுக்கு நினைவூட்ட, இந்த தீர்ப்பு ஒரு சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட சிறைத்தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.