கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெஹிவளைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 36 மற்றும் 39 வயதுடைய இரண்டு நபர்களும் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 10 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயினும் , மற்றையவரிடமிருந்து 05 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினும் , பெண்ணிடமிருந்து 05 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.