ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது!!!
நேற்று திங்கட்கிழமை (27) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய களனி பாலம், சேதவத்த , வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
“வெல்லம்பிட்டிய குடு ரெஜின“ என்ற பெண்ணே பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பொலிஸ் விசேடஅதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
![]()