நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றது.
ஹைதராபாத் அணி சார்பாக ஹென்றிச் க்லாசன் (Heinrich Klaasen) 80 ஓட்டங்களையும், அபிசேக் சர்மா (Abhishek Sharma) 63 ஓட்டங்களையும், ட்ராவிஸ் ஹெட் (Travis Head) 62 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
பந்து வீச்சில் பியூஸ் சவ்லா (Piyush Chawla) ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), மற்றும் ஜெரால்ட் கோட்ஸி (Gerald Coetzee) ஆகியோர் தலா 1 விக்கட்டை மும்பை சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
மும்பை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் திலக் வர்மா (Tilak Varma) 64 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
ஹைதராபாத் அணிக்கு பெட் கம்மின்ஸ் (Pat Cummins), மற்றும் ஜெய்தேவ் உனத்கட் (Jeydev Unadkat) ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஹைதராபாத் வீரர் அபிசேக் சர்மா (Abhishek Sharma) தெரிவாகியிருந்தார்.
இந்த வெற்றியுடன் ஹைதராபாத் அணி 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது நிலையில் உள்ளது.