சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஹொட்டன் சமவெளியை நேரில் சென்று நேற்று பார்வையிட்ட ஜனாதிபதி அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இவ்வாறு கூறினார்.
ஹொட்டன் சமவெளி தேசிய பூங்கா உட்பட அதனை அண்மித்த பகுதிகளை உயர்மட்ட சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் கருத்து வெளியிட்டார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சுற்றுலாத்துறையை வலுப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஹொட்டன் சமவளி மற்றும் அதன் வலயங்களை நேற்று நேரில் சென்று பார்வையிட்டதோடு அங்குள்ள விருந்தினர் பதிவேட்டில் குறிப்பொன்றையும் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.