பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் உள்ளே ஒரு முதலை சென்றமை தொடர்பான காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
ஏரிக்கு அருகில் உள்ள குறித்த ஹோட்டலின் விருந்து மண்டபத்திற்குள் முதலை இருப்பது காணொளியில் பதிவாகியுள்ளது.
ஹோட்டல் ஊழியர்கள் குறித்த முதலையை தோட்டம் மற்றும் ஏரிக்கு செல்லும் வாசல் வழியாக வழிநடத்திச் செல்வதும் காணொளி காட்சியில் பதிவாகியுள்ளது.








