Tamil News Channel

ஹோட்டலுக்குள் மீட்கப்பட்ட இரு சடலங்கள்..!

24-65f105475bbb0

அம்பாறை – பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த பெண்ணும் குறித்த  நபரும் நேற்றைய தினம் (12) விடுதியில் தங்கியிருந்த நிலையில், மாலை 5.00 மணி ஆகியும் இருவரும் அறையை விட்டு வெளியே வராததால், ஹோட்டல் உரிமையாளர் அருகம்பே சுற்றுலாப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து  அறையின் கதவை உடைத்து பாரத்த போது ​​பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

மேலும் குறித்த பெண்ணை கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts