ஹட்டன் பொலிஸ் பிரிவில் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் இன்று (30) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன், டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 28 வயதுகளுக்கிடைப்பட்ட நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் தொழில்புரிந்த இவர்கள், தீபாவளி பண்டிகைக்காக தமது ஊர் பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட பொலிஸார் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன்போது ஐஸ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் என்பன அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here