ஹொரணை – கொழும்பு வீதியில் பொல்கஸ்ஸோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது.

ஹொரணையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது, படுகாயமடைந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பொல்கஸ்ஸோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய முதியவர் ஆவார் .

இதனையடுத்து வேனின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here