100 குடும்பக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள்..!
மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 குடும்பக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 100 குடும்பங்களுக்கு இவ்வாறு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இந்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
குறித்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பிரதேச செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
![]()