வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நேற்றைய தினம் (05) கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் உயிருடன் திருப்பி விடப்பட்டுள்ளது.
கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் நேற்றுக் காலை குறித்த 11 டொல்பின்களும் அகப்பட்டன.
டொல்பின்கள் வலைக்குள் அகப்பட்டதை அறிந்த மீனவர்கள் பத்திரமாக 11 டொல்பின்களையும் உயிருடன் மீட்டு திரும்பவும் கடலுக்குள் பாதுகாப்பாக விட்டனர்.
மேலும் டொல்பின்களை உயிருடன் கடலுக்குள் அனுப்பி வைத்த மீனவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.