கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மட்டுமின்றி, நட்சத்திரங்களையும் மாற்றும்.
அந்த வகையில் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூன் 13 ஆம் திகதி ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார்.
இந்த நட்சத்திரத்தில் குரு பகவான் ஒகஸ்ட் 20 ஆம் திகதி வரை இருப்பதால் சில ராசிக்கு சூப்பராக இருக்கும்.
யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்பதை பார்க்கலாம்.
ரிஷபம்
குரு நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். சமூகத்தில் பிரபலமாக வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மேலும் உங்கள் மரியாதையும், கௌரமும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்கள் நல்ல வரனைப் பெறலாம்.
சிம்மம்
குரு நட்சத்திர பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை வழங்கும்.
வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்களின் செயல்திறனுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கை திருப்தியாக இருப்பதை உணர்வீர்கள்.
வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும். தந்தையுடனா உறவு சிறப்பாக இருக்கும்.
தனுசு
குரு நட்சத்திர பெயர்ச்சியானது தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். முக்கியமாக எதிர்பாராத இடங்களில் இருந்து பணத்தைப் பெறக்கூடும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களுடனான நட்பு கிடைக்கும்.
இந்த நட்பு எதிர்காலத்தில் மிகப்பெரிய நன்மைகளை வழங்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பான செயல்திறன் காரணமாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.