குரு பகவான் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாதத்தில் ரிஷப ராசிக்கு மாறியுள்ளார்.
குரு மற்றும் செவ்வாய் இணைப்பு இந்த மாதம் நிகழ்ந்துள்ளது.
இந்த சிறப்புமிக்க கிரகங்களின் இணைவால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது.
யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குரு மற்றும் செவ்வாய் இணைப்பு பல நன்மைகளை கொடுத்து வருகின்றது.
இந்த கிரக சேர்க்கையால் எதிர்பாராத வழிகள் மூலம் பண பலன்கள் அதிகம் கிடைக்கும்.
மென்மையான வார்த்தைகள் மற்றும் பேச்சுத்திறன் மூலம், நீங்கள் மற்றவர்களின் அபிமானத்தையும் அன்பையும் கைப்பற்ற முடியும், அது உங்கள் வாழ்க்கையில் பல்வேறு லாபங்களைக் கொண்டுவரும்.
உங்களின் பேச்சாற்றல் மூலம் வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தி லாபம் பெறலாம்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல காலம் தேடி வந்துள்ளது. குழந்தைகள் மூலமாகவோ அல்லது குழந்தைகள் தொடர்பான சுபச் செய்திகளைக் கேட்கும் யோகம் உண்டாகும்.
இந்த நேரத்தில் வருமானம் அதிகரித்து காணப்படும்.
பணியில் இருபவர்களுக்கு வேலையில் சாதகமான சூழ்நிலைகள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு சாதகமான காலம் வரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களைப் பொறுத்த வரையில் ரிஷப ராசியில் உருவாகும் அபூர்வ சேர்க்கை பல நன்மைகளைத் தந்து கொண்டிருக்கும்.
இந்த ராசியில் பிறந்தவர்கள் வரப்போகிற காலங்களில் வாழ்வில் நல்ல வசதியைப் பெறுவார்கள்.
புதிய வாகனம், சொத்து வாங்கும் கூட்டம் கூடும்வாய்ப்புகள் உருவாகும். லாபம் ஈட்ட முடியும். குறிப்பாக சொத்து சேர்ப்பவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.