A little girl poses for photographs to illustrate the topic of child abuse in Canberra, Monday, Oct. 28, 2013. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

மாத்தளை பிரதேசத்தில் 12 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரிகளின் இரண்டு கணவர்களினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சந்தேக நபர்களான சகோதரிகளின் இரண்டு கணவர்களில் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருகையில்,

சந்தேகநபர்கள் இருவரும் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு சகோதரிகளின் கணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சிறுமி தனது சகோதரிகளின் இரண்டு கணவர்களினால் 12 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்களான சிறுமியின் இரண்டு சகோதரிகளின் கணவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றையவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here