தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி தேஜாவின் நடிப்பில் உருவான இருமுடி கட்டு படம் கடந்த 21ம் திகதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
சிவ நிர்வாணா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்சத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 21ம் திகதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இருமுடி கட்டு திரைப்படம் முதல் 12 நாட்களில் இந்திய மதிப்பில் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.








