Tamil News Channel

12 ராசிக்காரர்களில் அதிஷ்டம் கிட்டபோகும் அந்தவொரு ராசிக்காரர்- உங்க ராசி என்ன?

பொதுவாக ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.

இந்த நம்பிக்கையை அடிப்படையாக் கொண்டு தொழில் விடயங்கள், வியாபாரங்கள் மற்றும் வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் உள்ளிட்ட அனைத்தை விடயங்களும் ஆரம்பிக்கப்படும்.

மேலும் இன்று கேட்டை, அஸ்வினி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் எனவே சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்வது அவசியம்.

அதேவேளை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படும் ராசிக்காரர்கள் இன்றைய தினத்தில் பொறுமையாக தமது அன்றாட நடவடிக்கைகளை ஆராய்ந்து செய்வதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.

இதற்கமைய மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்கள் அதிஷ்டம் கிட்டவுள்ள ராசிக்காரர் என்பதை பார்க்கலாம்.

மேஷ ராசி
  • இன்று எதிலும் அவசரம் வேண்டாம்.
  • குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
  • உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.
  • கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
  • கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும்.
ரிஷபம் ராசி
  • மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
  • புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
  • கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • முருகப்பெருமானை வழிபாட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
  • கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.
மிதுனம் ராசி
  • செலவுகளை சமாளிக்கத் தேவையான பணம் கைக்கு வரும்.
  • வெளியில் செல்லும் போது தேவையான முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்ததுஇ
  • நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
  • மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.
  • மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.
 கடகம் ராசி
  • மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.
  • வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.
  • தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
  • பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும்.
சிம்மம் ராசி
  • நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
  • தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
  • அம்பிகை வழிபாடு நல்லது.
 கன்னி ராசி
  • புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது.
  • நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
  • இன்று வேங்கடேச பெருமாள் நலம் சேர்ப்பார்.
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.
துலாம் ராசி
  • மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும்.
  • கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.
  • காரம் மற்றும் புளிப்பான உணவுகளைத் தவிர்க்கவும்.
  • வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும். இன்றைய தினம் விநாயகப்பெருமானை வழிப்பட்டால் நல்லது நடக்கும்.
  • சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
விருச்சிகம் ராசி
  • புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
  • கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • பைரவரை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
  • வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும்.
  • அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.
 தனுசு ராசி
  • புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
  • வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
  • உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
  • வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
  • ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.
 மகரம் ராசி
  • பணப்புழக்கம் அதிகரிக்கும்.
  • குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.
  • இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
  • அம்பிகையை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.
கும்பம் ராசி
  • புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
  • தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
  • வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
  • லட்சுமி நரசிம்மரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  மற்றவர்களுடன் சுமுகமாக நடந்துகொள்ளவும்.
 மீனம் ராசி
  • இன்றைக்கு புதிய முயற்சிகள் சாதகமாகும்.
  • சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.
  • வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
  • மகாலட்சுமியை வழிபட தடைகள் நீங்கும்
  • உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts