December 13, 2025
1,208 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருட்கள் அழிப்பு…!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

1,208 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருட்கள் அழிப்பு…!

Jun 30, 2024

பல்வேறு சந்தர்ப்பங்களின் போது கைப்பற்றப்பட்ட 1,208 கிலோகிராம் போதைப்பொருட்கள் அவை தொடர்பான, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து அழிக்கப்பட்டுள்ளன.

இதனை இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கை, புத்தளம் -வண்ணாத்தவில்லு, லாக்டோஸ் தோட்டத்தில் உள்ள அதிசக்தி வாய்ந்த போதைப்பொருள் எரியூட்டியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அங்கு, தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் ஆகியோருடன் புத்தளம் நீதவானின் மேற்பார்வையின் கீழ் இந்த அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *