Thursday, March 12, 2026

13 வயது சிறுமி காதல்-தாய் பெற்றோல் ஊற்றி கொலை!

Must Read

இளவயது காதலால் கொலைகளும் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன.

பதுளை பகுதியில் 13 வயது சிறுமியொருவர் தனது 28 வயது தாயை எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பெண்ணொருவர் அவரது 13 வயது மகளினால் பெற்றோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படும் நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பெண், பதுளை, எகொடவெலவைச் சேர்ந்த 28 வயது துலாஞ்சலி குமாரி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய 13 வயது சிறுமி தற்போது நன்னடத்தையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி 18 வயது இளைஞனுடன் காதல் உறவில் இருந்தநிலையில் அவரது தாயார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 04ஆம் திகதி இரவு தாய் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் தாயின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights