Tamil News Channel

14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

india thamilaka kadal workers

 யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள்  கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , அத்துமீறி நுழைத்து தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்ய்துள்ளனர்.

நேற்றைய தினம் (06)  புதன்கிழமை, கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதன் காரணமாகவே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பின்னர்,  அவர்களை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இவ்வாறு 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் 3 படகுகளும் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், விசாரணைகளின் பின்னர், கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக அவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts