இஸ்ரேல்- காஸா போரில் கடந்த 24 மணி நேரத்தில் 141 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 400 பேர் காயமடைந்துள்ளனர்.
காஸா பகுதியில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது வரை 38 ஆயிரத்து 584 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 88 ஆயிரத்து 800 பேர் காயமடைந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சரக தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் – காஸா போர் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை தொடர்ந்து வருகின்றது.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதற்காக காஸாவை சுற்றி வளைத்து தாக்கி வரும் இஸ்ரேல், பொதுமக்களின் குடியிருப்புகள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 2