யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17 வயதான சிறுவன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறுவனைக் கைது செய்த பொலிஸார் அவரை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய வேளை அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 2