தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க ஆளும், எதிர்க்கட்சி அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்த்துள்ளார்.
1700 ரூபா சம்பளத்தை வழங்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதும் தோட்டக் கம்பனிகள் இதுவரை அதனை வழங்க மறுத்து வருகின்றன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல் அனைவரும் இணைந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
அத்துடன் 1700 ரூபா சம்பளம் என்பது எந்த வகையிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு போதுமானது என நான் கூறவில்லை. என்றாலும் அதையாவது பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் நேற்று (19.06) நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.