December 14, 2025
18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர்  கைது…!
News News Line Top Updates புதிய செய்திகள்

18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர்  கைது…!

Apr 6, 2024

கிளிநொச்சியில் 18 கிலோ 470 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னாரில் உள்ள போதை ஒழிப்பு விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக குறித்த பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் வைத்தே சோதனை மேற்கொண்ட போது கஞ்சா குறித்த சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரும், சான்று பொருட்களும் கிளிநொச்சி பொலிஸ் காவலில் உள்ள நிலையில் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *