முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை (1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப் பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந் நிலையில் இந்த அம்புலன்ஸ் சேவையை மீண்டும் மிக விரைவாக இயக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம், முள்ளியவளை, மணலாறு பகுதிகளின் (1990) இலவச அம்புலன்ஸ் சேவைகள் மாதக் கணக்காக திருத்த பணிகளில் உள்ளதாகவும் இவற்றை விரைவாக நிறைவு செய்து சேவையில் ஈடுபடுத்தும் வகையில் உரிய தரப்பின் கவனமெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.