ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, மில்லகஹமுல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கினிகத்தேனை பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த கட்டிடம் 200 அடி பள்ளத்திற்குள் இடிந்து விழுந்துள்ளது.
குறித்த கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் இவ்வாறு இடிந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கட்டிடம் இடிந்து விழும் போது அங்கு எவரும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post Views: 2