சுகாதார அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் நாட்டில் சுமார் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளதாக மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மிகவும் அத்தியாவசியமான 40 வகையான மருந்துப் பொருட்களும் ஏனைய 160 வகையான மருந்து வகைகளுக்கும் இவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்டதாகவும் தற்பொழுது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.