பல்கலைக்கழக அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமை (05) நள்ளிரவுடன் முடிவடைகிறது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (யுஜிசி) துணைத் தலைவர் பேராசிரியர் சந்தன பி. உடவத்த கூறுகையில், இதுவரை 85,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் விருப்பமான பல்கலைக்கழகத்தை மட்டும் சனிக்கிழமை (06) முதல் மாற்ற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இம் மாற்றம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி வரை இணையவழியில் மேற்கொள்ள முடியும் என பேராசிரியர் உடவத்த தெரிவித்துள்ளார்.
Post Views: 2