கடந்த வெள்ளிகிழமை கட்டாரில் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசியகிண்ண காற்பந்தாட்ட தொடரில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தன.
முதல் போட்டியில் தென் கொரியா மற்றும் பஹ்ரைன் அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் தென் கொரியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியிருந்தது.
தென் கொரியா சார்பாக இன் பியூம் ஹ்வாங் ஒரு கோலையும், கங் இன் லீ 2 கோல்களையும் பெற்றனர்.
பஹ்ரை அணிக்கு அப்துல்லாஹ் அல் ஹஸாஸ் ஒரு கோலையும் பெற்றுக் கொடுத்தார்.
நேற்றைய இரண்டாவது போட்டியில் இந்தோனேசியா மற்றும் ஈராக் அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியை ஈராக் அணி 3-1 என்ற கோல் கணக்கில் கைப்பற்றியது.
ஈராக் அணி சார்பாக மொஹனட் அலி, ஒசாமா ராசித் மற்றும் ஐமன் ஹுசைன் ஆகியோர் தலா ஒரு கோல்களையும், இந்தோனேசியா அணி சார்பாக மர்சலினோ பெர்டினன் ஒரு கோலையும் பெற்றிருந்தனர்.
நேற்றைய நாளின் மூன்றாவது போட்டியில் மலேசியா மற்றும் ஜோர்டான் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் ஜோர்டான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
ஜோர்டான் அணி சார்பாக மஹ்மோட் அல் மர்டி மற்றும் முசா அல் டாமரி ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றனர்.
இன்றைய தினம் மேலும் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதன் முதலாவது போட்டியில் தாய்லாந்து மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய அணிகளும் மற்றைய போட்டியில் சவுதி அரேபியா மற்றும் ஓமான் ஆகிய அணிகளும் மோதவுள்ளன.