திடீரென அதிகரித்த இலங்கை ரூபாவின் பெறுமதி

திடீரென அதிகரித்த இலங்கை ரூபாவின் பெறுமதி

Nov 30, 2023

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் (30) இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (30) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333.45 ரூபாவாகவும், கொள்வனவு விலை 323.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 247.13 ரூபாவாகவும், கொள்வனவு விலை 236.02 ரூபாவாகவும் பதிவாகியுள்ள நிலையில், யூரோ ஒன்றின் விற்பனை விலை 367.62 ரூபாவாகவும், கொள்வனவு விலை 353.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Read More
வவுனியாவில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட தம்பதியின் சடலம்

வவுனியாவில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட தம்பதியின் சடலம்

Nov 30, 2023

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று கணவனும் மனைவியும் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம் பிரதான வீதியில் தனது மகனின் வியாபார நிலையத்திற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் வசித்து வரும் தம்பதியினரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று காலை வியாபார நிலையத்தைத் திறப்பதற்காக வருகை தந்த மகன் தனது தாயும் தந்தையும் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தமையைக் கண்டு

Read More
டுபாய் புறப்பட்டார் ஜனாதிபதி

டுபாய் புறப்பட்டார் ஜனாதிபதி

Nov 30, 2023

டுபாயில் நடைபெறவுள்ள ஐ.நா. சபையின் 28 ஆவது காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் (COP28) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டுபாய்க்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (30) காலை டுபாய்க்கு அவர் புறப்பட்டார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28) இன்று (30)

Read More
மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்ட மோதல் இடைநிறுத்தம்

மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்ட மோதல் இடைநிறுத்தம்

Nov 30, 2023

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிற்கு இடையிலான மோதல் இடைநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதன் காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களின் அடிப்படையில் யுத்தநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்படுகின்றது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. புதன்கிழமை (29) இரவு மேலும் 16 பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ள ஹமாஸ் மோதல் இடைநிறுத்த நீடிப்பை உறுதி செய்துள்ளது. இதேவேளை அமெரிக்க இராஜாங்க

Read More
இ.போ.ச தனியார் மயமாக்கப்படும் சாத்தியம்

இ.போ.ச தனியார் மயமாக்கப்படும் சாத்தியம்

Nov 30, 2023

இந்த ஆண்டிற்குள் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) இலாபம் ஈட்டாவிடின், அதனை தனியார் மயமாக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர், இதை தவிர்க்க வேண்டுமாயின் இலங்கை போக்குவரத்து சபையை இலாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கை போக்குவரத்து சபையில்

Read More
இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை

இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை

Nov 30, 2023

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (30) தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சியேற்பட்டுள்ளது. இதன் படி, இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான தங்கத்தின் விலைகளை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி, 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 190,150 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,770 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கத்தின் இன்றைய விலை பவுணொன்றிற்கு 174,350 ரூபாவாகவும்

Read More
மன்னாரிலிருந்து கடத்த முயற்சித்த தங்கம் மீட்பு

மன்னாரிலிருந்து கடத்த முயற்சித்த தங்கம் மீட்பு

Nov 30, 2023

மன்னார் கடல் பகுதியில் படகு ஒன்றில் கடத்த முயற்சித்த தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் கடல் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு சுமார் 8 கிலோ தங்கக் கட்டிகள் கடத்துவதற்கு முயற்சித்த போதே அவை மீட்கப்பட்டுள்ளதாக சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே நேற்றையதினம்

Read More
100 வது வயதில் காலமானார் அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர்

100 வது வயதில் காலமானார் அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர்

Nov 30, 2023

அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹென்றி ஹிஸ்ஸிங்கர் (Henry Kissinger) தனது 100 வது வயதில் காலமானார். 1923 ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த ஹென்றி ஹிஸ்ஸிங்கர் அவரது குடும்பத்தினருடன் ஜேர்மனியிலிருந்து தப்பியோடி அமெரிக்காவிற்கு சென்றார். 1943 இல் அமெரிக்க பிரஜையான இவர் அமெரிக்க இராணுவம் மற்றும் அரசாங்கத்திலும் பல சேவைகளை ஆற்றியிருந்தார். குறிப்பாக நிக்சன் போர்ட் அரசாங்கங்களில் தேசிய

Read More
வாக்குமூலத்திற்காக CID இல் ஆஜரான ஜெரோம் பெர்னாண்டோ

வாக்குமூலத்திற்காக CID இல் ஆஜரான ஜெரோம் பெர்னாண்டோ

Nov 30, 2023

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று (30) காலை ஆஜராகியுள்ளார். பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு சிங்கப்பூர் சென்ற அவர், நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். சிங்கப்பூர் சென்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டிருந்த நீதிமன்றம், பின்னர் அவர் இலங்கை வரும் போது கைதுசெய்ய வேண்டாமெனவும் நாட்டுக்கு

Read More
T20 உலக கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி

T20 உலக கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி

Nov 30, 2023

2024 இல் இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய, சிம்பாப்வே அணி 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச T20 போட்டிகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. அதனையடுத்து, டெஸ்ட், சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச T20 போட்டிகள் அடங்கிய தொடர்களில்

Read More