Tamil News Channel

2024 ஐ.பி.எல் கிண்ணத்தை தட்டி சென்ற  KKR அணி…

WhatsApp Image 2024-05-27 at 11.10.41_e78ba609

நேற்றைய தினம் நடைபெற்ற 17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிகட்ட போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிக்கொண்டன.

இறுதிப்போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் ஸ்டார்க் பந்து வீச்சில் 2 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரை வைபவ் அரோரா வீசிய நிலையில் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் கீப்பரிடம் கட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ராகுல் திரிபாதி 13 பந்தில் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழக்க மற்றொரு வீரரான நிதிஷ் ராணா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் 23 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க ஷபாஸ் அகமது 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ராகுல் திரிபாதி 13 பந்தில் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழக்க மற்றொரு வீரரான நிதிஷ் ராணா 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா வீரர்களின் அபார பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் தடுமாறியது. சற்று நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் 23 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க. அடுத்துவந்த ஷபாஸ் அகமது 8 ஓட்டங்களிலும், அப்துல் சமத் 12 ஓட்டங்களிலும், கிளாசன் 16 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில், ஐதராபாத் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

சிறப்பாக பந்து வீசிய கொல்கத்தா வீரர்களன ரசல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ராணா தலா 2 விக்கெட்டுகளையும், வைபவ், நரைன், வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 17 ஆவது ஐ.பி.எல் கிண்ணத்தை தனதாக்கிகொண்டது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts