2024 ஜனவரி முதல் நேற்று (09) வரை இலங்கையில் 25,799 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் 9,441 பேரும், வட மாகாணத்தில் 4,457 பேரும், மத்திய மாகாணத்தில் 2,325 பேரும், வடமேல் மாகாணத்தில் 1,860 பேரும், தென் மாகாணத்தில் 1,934 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 2,539 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வருடம் (2024) டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வடமேற்கு, தெற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு பரவுவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here