Tuesday, June 17, 2025

Monthly Archives: February, 2024

முஷாரப்பை கட்சியிலிருந்து நீக்கம்! – உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பை கட்சியில் இருந்து நீக்கியது சட்டத்துக்கு  முரணானது என உயர் நீதிமன்றம் இன்று (29)  தீர்ப்பளித்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக  நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வழங்கிய பிரியந்த ஜயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த...

மோட்டார் போக்குவரத்து தொடர்பில் வெளியிட்ட தகவல்!

எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திலும் சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அதற்காக  தொலைபேசி இலக்கமும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக  கொழும்பில் இன்று (29) ...

100 ஆண்டுகள் பழமையான பதக்கங்கள் மக்கள் பார்வைக்கு..!

1924 ஆம் ஆண்டு பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளில் தனது தனித்துவமான சாதனையை நிகழ்த்திய பின்லாந்து வீரர் பாவோ நூர்மி (Paavo Nurmi) வென்ற ஐந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களும் பாரிஸில் அடுத்த மாதம் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. ஜூலையில் நடைபெறவிருக்கும் பாரிஸ் விளையாட்டுகளைக் குறிக்கும் வகையில் இப்பதக்கங்கள் மார்ச் 27 முதல் செப்டம்பர் 22 வரை காட்சிப்படுத்தப்படவுள்ளது. செயின்...

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான போரில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை அறிவித்திருந்தது. இதே சம்பவத்தில் ஜாபர் பட்டாலியனின் மேலும் ஏழு வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. செவ்வாயன்று காசா நகரின் ஜெய்டவுன் சுற்றுப்புறத்தில் கண்ணி வெடி வெடித்ததில் ஷஹர் மற்றும் சீஃப் ஆகிய இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும்...

கனடாவுக்கு பறக்கவுள்ள அனுர..!

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் வாரம் கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன் போது, கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின் போது கனடாவில் உள்ள அரசியல்வாதிகளை அவர் சந்திக்கவுள்ளதுடன், ரொரன்டோ பகுதியில் நடைபெறவுள்ள கூட்டமொன்றிலும் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ரயிலில் மோதி இளைஞன் பலி..!

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடன் முந்தல் – புளிச்சாக்குளம் பாதுகாப்பற்ற ரயில் கடவையின் ஊடாக செல்ல முற்பட்ட இளைஞன் ஒருவர் நேற்று (28) விபத்துக்குள்ளானதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்துலுஓயா பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனை  முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் சடலம் முந்தல் மாவட்ட...

சாந்தனின் மரணம்! முன்வைத்துள்ள குற்றச்சாட்டு..!

உடல்நலம் குன்றியிருக்கக் கூடிய சாந்தனை உடனடியாக விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு செவி சாய்க்க இந்திய அரசு மறுத்துவிட்டது என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். சாந்தனின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில்,உச்சநீதிமன்ற ஆணையிட்டபடி உடனே விடுதலை செய்திருந்தால், அவர் தமிழீழம் சென்று தனது...

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயல்பட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு இலங்கையில் அனைத்து தேர்தல்களும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையின் வரலாற்றில் நடைபெறவிருந்த பல தேர்தல்களை...

அன்புத்தம்பி சாந்தனை மரணத்தில் தள்ளியது திமுக அரசு! – சீமான் சீற்றம்..!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  உடல்நலக் குறைவால் காலமான சாந்தனுக்கு, இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் பதிவில், அன்புத்தம்பி சாந்தனுக்கு முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவேண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது...

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் வெடித்த போராட்டம்..!

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, பிரித்தானியாவிலிருந்து ஜெனிவா நோக்கி பயணிக்கும் துவிச்சக்கர வண்டி பயணம் கடந்த 19ஆம் திகதி பெல்ஜியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக ,பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களுடன் இணைந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். போராட்டத்தை  தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் அரசியற் சந்திப்பும் நடைபெற்றது. அச்சந்திப்பில் தாயகத்தில் தொடரும் இனவழிப்பு...
- Advertisement -spot_img

Latest News

இஸ்ரேல்-ஈரான் மோதல் உச்சத்தில்: பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் – பல நூறு பேர் உயிரிழப்பு!

இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தற்போது நான்காவது நாளாக நீடித்து வருகிறது. இந்த...
- Advertisement -spot_img