பறவையையும் நாயையும் பிரித்த வனவிலங்கு துறை அதிகாரிகள் -மீண்டும் சேர்க்குமாறு மக்கள் வேண்டுகோள்..!
அவுஸ்திரேலியாவில் இன்ஸ்டகிராமில் பிரபலமான மக்பை பறவையை வனவிலங்கு காப்பகத்தினர் அதனை வளர்த்தவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ள நிலையில் அந்த பறவையை மீண்டும் அந்த குடும்பத்திடம் ஒப்படைக்கவேண்டும் என குயின்ல்ஸாந்து பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குயின்ஸ்லாந்தை சேர்ந்த தம்பதியினர் மொலி என அழைக்கப்படும் மக்பையை குஞ்சுப்பருவத்தில் மீட்டெடுத்து வீட்டில் வளர்த்து வந்தனர் . அந்த வீட்டில் உள்ள பெகி எனப்படும் புல்டெரியர் இன நாய்க்கும்
வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு..!
வவுனியாவில் இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று தெரிவித்தனர். ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கவிப்பிரியா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள தனது வீட்டில் இந்த இளம் யுவதி தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டதாக சிதம்பரபுரம் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த யுவதியின் சடலம் இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்திற்கு அபார வெற்றி..!
நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3
சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் மரணம்..!
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இம்முறை சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு பெரியகல்லாறு மயான வீதியில் குறித்த இரு மாணவர்களும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நிலையில், வேகத்தினை கட்டுப்படுத்த முடியாது மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் பெரியகல்லாறு
சுகயீனமுற்ற தம்பதியினர் மரணம்..!
அகலவத்தை – வந்துரப்ப பிரதேசத்தில் தம்பதியினர் திடீரென உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அகலவத்தை, வந்துரப்ப பிரசேதச்தில் வசிக்கும் 59 வயதுடைய வன்னி ஆராச்சிகே உபாலி டயஸ் மற்றும் அவரது மனைவி சந்திரிகா அமரசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடும் வாந்தி பேதியால் கணவன், மனைவி தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த நிலையில், கணவன் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து
பெண் ஒருவருடன் சிக்கிய பிக்கு..!
தியதலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் அறை ஒன்றில் பெண் ஒருவருடன் தங்கியிருந்த பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் குறித்த பிக்குவை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பௌத்த பிக்கு பொரளந்த பகுதியில் அமைந்துள்ள விஹாரையொன்றைச் சேர்ந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 46 வயதான பௌத்த பிக்கு, 40 வயதான பெண் ஒருவருடன் ஹோட்டல் அறையில்
கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் படுகொலை..!
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் கத்தரிக்கோலால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையுடன் தொடர்படைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து கத்தரிக்கோலால் தாக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் தாக்குதலில் பலத்த காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.