விறுவிறுப்பான வெற்றியை பதிவு செய்த ராஜஸ்த்தான்..!
2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்த்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) மற்றும் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ராஜஸ்த்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணி 2 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்த்தான் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
மாவோ அமைப்பினரை இலக்கு வைத்த இந்திய இராணுவம்..!
இந்தியாவின் – சத்தீஸ்கரின்(Chhattisgarh) காங்கர் மாவட்டத்தில் மாவோ அமைப்பினருக்கும், இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 18பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், மூன்று இந்திய பாதுகாப்புப் படையினரும் காயமடைந்ததாக இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 19 ஆம் திகதி இந்திய மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்டத்தில் 60,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில்
மியான்மரில் கடற்றொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு..!
மியான்மரில் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில், கடற்றொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு கோரி தூதரகம் பல கோரிக்கைகளை முன்வைத்ததாக மியன்மாருக்கான இலங்கை தூதர் ஜனக பண்டார தெரிவிதுள்ளார். மியான்மர் பிரதமரையும் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை விடுத்த நிலையில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாகவும் தூதுவர்
ரஷிய தாக்குதலை முறியடிக்க முடியவில்லை..!
ரஷியா உக்ரைனின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 11 ஆம் திகதி டிரிபில்லியா மின்சார உற்பத்தி நித்தை ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கியது. இதில் உற்பத்தி நிலையம் முழுமையாக சேதம் அடைந்து 100 சதவீதம் மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்ததாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியா 11 ஏவுகணைகளை மின்சார உற்பத்தி நிலையம்
குழந்தைகளிடையே பரவும் நோய்..!
சம காலங்களில் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் பரவுகின்ற நிலையில் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார். நீட்டிக்கப்பட்ட விடுமுறை நாட்களை தொடர்ந்து குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு அதிகம் பரவி வருவதாக குறிப்பிடப்படுகிறது. அடிக்கடி தண்ணீருடன் மலம் வெளியேறுதல், வயிற்று வலி அல்லது பிடிப்புகள், பசியின்மை, குமட்டல் மற்றும்
நுவரெலியாவில் ஜனாதிபதி சுற்றுலா விஜயம்..!
நுவரெலியாவின் எழில் மிக்க மலைகளை அண்மித்துக் காணப்படும் சுற்றுலாத் தொழில்துறையின் மறுமலர்ச்சி தொடர்பில் ஆராய நேற்று (16) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா – உடபுசலாவை – கோர்ட் லொட்ஜ் தோட்டத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தார். Peko Trail பாதையினூடாக ஜனாதிபதி நடைபயணமாக இப்பகுதிளை மேற்பார்வை செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். Peko Trail பாதையினூடாக 3.2 கி.மீ தூரத்திற்கு நடைப் பயணமாக