ஜேர்மனியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுப்புன் முதலாம் இடம்..!
ஜேர்மனியில் வெள்ளிக்கிழமை (24) இரவு நடைபெற்ற கொன்டினென்டல் டுவர் ப்றொன்ஸ் அன்ஹால்ட் 2024 மெய்வல்லுநர் போட்டியில் 100 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் யுப்புன் அபேகோன் முதலாம் இடத்தைப் பெற்றார். ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.16 செக்கன்களில் நிறைவுசெய்தே அவர் முதலாம் இடத்தைப் பெற்றார். நேற்று நடைபெற்ற தகுதிகாண் போட்டியை யுப்புன் அபேகோன் 10.15 செக்கன்களில் ஓடி முடித்து
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்திய மக்களவைத் தேர்தல்..!
இந்திய மக்களவைத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்றத்தின் 543 இடங்களை வெற்றிகொள்ள முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஐந்தாவது கட்டத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்கனவே 310 இடங்களை கைப்பற்றியுள்ளதாக இந்திய உள்விவகார அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார். இதன்படி, பாரதிய ஜனதா கட்சியின் கோட்டைகளாக
நீதிமன்றத்தின் தீர்ப்பை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை..!
சர்வதேச நீதிமன்றம் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ள போதிலும் இஸ்ரேல் அதனை ஏற்றுக்கொள்ளும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தனது இராணுவநடவடிக்கையை நிறுத்தவேண்டும் என சர்வதேசநீதிமன்றம் உத்தரவிடக்கூடாது என இஸ்ரேல் எதிர்பார்த்தது ஹமாசினை தோற்கடிப்பதற்கு இராணுவ நடவடிக்கை அவசியம் என இஸ்ரேல் கருதுகின்றது. எனினும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பினை
அரசியலில் இருந்து ஓய்வு: விஜயகலா மகேஸ்வரனின் திடீர் அறிவிப்பு..!
அடுத்த தேர்தலே தனது அரசியல் பயணத்தின் இறுதித் தேர்தல் என்றும், அதிலிருந்து தான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலங்களில் நாடு சோமாலியாவின் நிலைக்குச் சென்றமைக்கு, மக்கள் தவறாக வாக்களித்து பல மோசமான தலைவர்கள் ஆட்சிக்கு வந்தமையே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தலில் படுதோல்வியடைந்தும் ஒரு
ரணிலின் வருகைக்கு எதிர்ப்பு- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்!
கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையினை எதிர்த்து கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி அவர்கள் இன்று(25) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். குறித்த ஊடக சந்திப்பில் இன்று கிளிநொச்சிக்கு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம ஒன்றினை மேறகொண்டுள்ளார் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றை
ரமெஷ் பத்திரணவால் புதிய உறுப்பினர்கள் நியமனம்..!
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்கு புதிய உறுப்பினர்கள் 3 பேரை சுகாதார அமைச்சர் ரமெஷ் பத்திரண நியமித்துள்ளார். அதன்படி, பட்டய கணக்காளர் சுஜீவ முதலிகே, ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் இலங்கை நிர்வாக சேவையின் தரம் 1 இன் சிரேஷ்ட அதிகாரி சுசந்த கஹவத்த, பாலித குமாரசிங்க ஆகியோர் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் நியமிக்கப்பட்ட
இருளில் மூழ்கிய இலங்கையின் பல பகுதிகள்!
சீரற்ற காலநிலையினால் இலங்கையில் 431, 500 பேர் மின் தடை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மின் தடை தொடர்பில் நாளாந்தம் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதால், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மீள பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் (24) வரையில் 330,000 பேருக்கான மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வந்துள்ளதாகவும்
பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு…!
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 5,320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (25)காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்,
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!
நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய கடும் மழை காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவற்றுள், 6 மரணங்கள் மரங்கள் முறிந்து விழுந்ததால் ஏற்பட்டுள்ளன. 18 மாவட்டங்களின் 171 பிரதேச செயலகப் பிரிவுகளில் 11,610 குடும்பங்களைச் சேர்ந்த 43,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய
பாலத்திலிருந்து கீழே குதித்த இளைஞன்..!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அத்துருகிரிய மற்றும் கொட்டாவ பகுதி பாலத்திலிருந்து இளைஞன் ஒருவர் கீழே குதித்த நிலையில் வாகனத்தில் மோதி படுகாயமடைந்துள்ளதுடன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர். அத்துருகிரிய, வல்கம சுவா மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு விபத்துக்குள்ளாகிக் காயமடைந்துள்ளார் குறித்த இளைஞன் அதிவேக நெடுஞ்சாலையில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது