கண் பார்வையை கூர்மையாக்கணுமா? அப்போ இதை செய்யுங்கள்..!
கண்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்தும் பாதுகாத்து கொள்ளவும் ஒரே வாரத்தில் கண்பார்வையை கூர்மையாக்கவும் எளிமையாக பின்பற்றக்கூடய சில விடயங்கள் .. காலையில் எழுந்ததும் 2 முதல் 4 நொறுக்கப்பட்ட கருப்பு மிளகை சூடான பாலில் போட்டு, அதனுடன் 4 முதல் 5 ஊறவைத்த பாதாம் மற்றும் தேன் சேர்த்து தொடர்ச்சியாக பருககிவந்தால் கண் பார்வை விரைவில் கூர்மையடையும். பாதாம், கருப்பு
இலங்கை மெய்வல்லுனர் நிறுவன மாவட்ட சங்கங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை மெய்வல்லுர் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள 102 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டி தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஜுன் மாதம் 25 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் மெய்வல்லுநர்களிடம் இருந்து அல்லது அவர்கள் சார்பில் கழகங்கள், பாடசாலைகள், மாவட்ட சங்கங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இவ்விண்ணப்பத்திக்கான முடிவு திகதி ஜூன் 18
வெப்பதால் 85 பேர் பலி..!
கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பதால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இவ்வாறு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதேவேளை, பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 10 தேர்தல் பணியாளர்கள் உட்பட 16 பேர்
ஜூன் மாதத்துக்கான கொடுப்பனவு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மே மாதம் இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான 1518 மில்லியன் ரூபா மாவட்ட செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக கொடுப்பனவுகள் தாமதமாகியிருந்த நிலையில், ஜூன்
இந்தியாவில் இறுதி கட்ட வாக்குப் பதிவு – வெடிக்கும் வன்முறைகள்..!
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 07 கட்டங்களாக இடம்பெற்று வரும் நிலையில் இன்று இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகின. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் வன்முறை மற்றும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் 08 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (01) காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது. இந்தியா
ரஷ்யாவைத் தாக்க அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த ஜோ பைடன் அனுமதி..!
ரஷ்யாவுக்கும் உக்ரெய்னுக்கும் இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், ரஷ்யா அதன் நிலையில் முன்னேற்றமடைந்து வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே உக்ரெய்னுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா உதவி செய்தது. இவ்வாறிருக்க தற்சமயம் தாங்கள் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவிலுள்ள இராணுவ நிலைகளில் தாக்குதல்களை நடத்தலாம் என உக்ரெய்னுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளதாக அவரது அதிகாரிகள்
இலங்கையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்..!
நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வருடத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும், 5 வருடங்களுக்குள் நாட்டின் சகல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின்
ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை..! சுரேன் ராகவன் தெரிவிப்பு..!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்களுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை
190 பேரின் பெறுபேறுகள் இடை நிறுத்தம்…!
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் இதில் 2 இலட்சத்து 69 ஆயிரத்து 613 பேர் பரீட்சைக்குத் தோற்றியதுடன் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 444 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றுள்ளனர் அத்துடன் 190 பரீட்சார்த்திகளின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. இதேவேளை – பரீட்சை மீளாய்வு செய் வதற்காக
பல்கலைக்கழகத்திடம் கையளிக்கப்படவுள்ளன..!
தெற்காசிய தொழில்நுட்ப மருத்துவ நிறுவனம் (SAITM) மற்றும் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை (NFTH) ஆகியவற்றை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திடத்திடம் கையளிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 2025ம் ஆண்டு ஜனவரியிலிருந்து கல்விப் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னதான திட்டமிடலுக்கென மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திடம் அவை கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.