20 மில்லியன் ரூபா செலவில் அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்!
திருகோணமலை செல்வநாயகபுரத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்ததுடன், மக்கள் பாவனைக்காக கையளித்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல உட்பட அரச அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சட்ட விரோத மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!!!
சட்ட விரோதமாக முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த பொகவந்தலாவ ராணி காடு பகுதியை சேர்ந்த நால்வர் நேற்று (18.06) இரவு பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவம்!
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, நீளத்திகாடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவமானது நேற்றையதினம் வெகு சிறப்பாக ஆரம்பமாகியது. அந்தவகையில் நேற்று (18) மதியம் அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று அன்னதான நிகழ்வு நடைபெபெற்றது. பின்னர் மாலை அலங்கார உற்சவம் நடைபெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர், வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும்
சர்வதேச யோகா தின நிகழ்வு!!!
மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி ‘பெண்கள் வலுவூட்டல்களுக்கான யோகா’ எனும் கருப்பொருளில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இன்றைய தினம் (19.06) இடம் பெற்றுள்ளது. குறித்த யோகா நிகழ்வில் இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சாய் முரளி பிரதம விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். மேலும் யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரி நாகராஜன் நானாட்டான் டிலாசால்
தமிழ்ப்பொதுவேட்பாளர் ஆதரவுக் கூட்டங்கள்!
நடைபெற இருக்கும் 2024 சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் பொதுச்சபை தொடர் கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் நடாத்தி வருகின்றது. அந்தவகையில் 14.06.2024 அன்று வெள்ளிக்கிழமை மாலை கொடிகாமம் வர்த்தக சங்கத்தினருடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. 18.06.2024 அன்று காலை சங்காணை கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டியதன் அவசியம் பற்றியும்
இலங்கை மக்களுக்கு அதிகரிக்கும் வரிகள்!!!
இலங்கை தொடர்பான இரண்டாவது மதிப்பாய்வை அடுத்து அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த மாதத்திற்குள் தொடர்ச்சியான வரி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய டிஜிட்டல் சேவையுடன் தொடர்புபட்ட துறைகளிற்கும் பெறுமதி சேர் வரியை அறவிடுதலும் மற்றும் ஏற்றுமதி சேவைகளிற்கு தற்போது விதிக்கப்படும் வருமான வரியில் விலக்களிக்கப்படுவதும் முக்கிய திருத்தங்களாக கூறப்படுகின்றது. மேலும் விற்பனைச் செயற்பாடுகளுக்கு அறவிடப்படும் சமூக பாதுகாப்பு வரிக்கு பதிலாக
யாழ் பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் நடாத்தி வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த
5 சுற்றுலா வலயங்கள் ஆரம்பிப்பு: நளின் பெர்ணாண்டோ
நாட்டில் மேலும் 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மின்சாரம் எரிபொருள் எரிவாயு இல்லாத ஒரு நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது வேடிக்கையான விடயமாகும். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க நெருக்கடிக்கு தீர்வு காணும்
T20 உலகக் கிண்ண தொடரில் ஏற்பட்ட தோல்வி: நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் விலகல்..!
ஒரு நாள் மற்றும் T20 அணியின் தலைவர் பதவியில் இருந்து நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். அத்துடன், 2024-25 ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தத்தையும் அவர் நிராகரித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் பேரவை வில்லியம்சனின் முடிவை அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கேன் வில்லியம்சன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிலையில் மை போட்டு பார்ப்பது போல்; ஒருவருடைய மனதை படிக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா..?
ஜோதிடத்தை பொறுத்தளவில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணம் இருக்கிறது. ஒருவருடைய தனத்திறமையும் ஆற்றலும் அவர்களுடைய எதிர்காலத்தை கணிக்க உதவும். அந்த வகையில் சில ராசியை சேர்ந்தவர்களுக்கு பிறரின் மனதை படிக்கும் சக்தியும் உண்டு. அந்தவகையில் வெற்றிலையில் மை போட்டு பார்ப்பது போல் ஒருவருடைய மனதை தெளிவாக புரிந்துக்கொள்ளும் அந்த ராசியினர் யார் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். கடகம் கடக