முச்சக்கரவண்டி மோதியதில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்….!
பாதுக்கை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்கம்பிட்டிய பகுதியில் மீபேவிலிருந்து இங்கிரிய நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த வயோதிபப் பெண் மீது மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது 79 வயதுடைய வயோதிபப் பெண் காயமடைந்துள்ள நிலையில் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரது சடலம் ஹோமாகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஹோமாக
போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது….!
மொரட்டுவை பிரதேசத்தில் எகொட உயன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் 48 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 2 மற்றும் போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரங்கள் என்பன
வீட்டிலிருந்து எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் 43 வயதுடைய பெண் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருகையில், குறித்த நபர் தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ள நிலையில் இரவு 10 மணியளவில் எரிகாயங்களுடன் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த வேளை, பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளார். பின்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம்
மின்கம்பம் விழுந்ததில் மின்சார சபை ஊழியர் உயிரிழப்பு…!
மின்சார சபைக்குச் சொந்தமான லொறியில் மின்கம்பத்தைக் கொண்டு சென்று அதனை அகற்றும் செயற்பாட்டில் ஈடுபடும் பொழுது ஊழியர் மீது மின்கம்பம் விழுந்ததில் மின்சார சபை ஊழியர் உயிரிழந்துள்ளார். மின்சார சபையில் பணியாற்றிய 23 வயதுடைய அம்பேகமுவ உடபுலத்கம பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்லுண்டாய் பகுதி மக்கள் போராட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் கல்லுண்டை பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட பகுதியில் ஜே/135, ஜே/136 என இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. ஆனால் மொத்தமாக 88 குடும்பங்கள் தான் வசிக்கின்றன. ஜ/135 கிராம சேவகர் பிரிவில் சுமார் 27
உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் 5 யோகாசனம்..!
உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பெரும்பாலோருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். உடல் எடை அதிகரிக்க தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது. அந்தவகையில், உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் 5 யோகாசனம் குறித்து விரிவாக பார்க்கலாம். தடாசனம் மலை போல் நிற்கும்
விநாயகரின் சிறப்புகள்.. !
வினைகளை தீர்ப்பவர் விநாயகர். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் தடையின்றி முடிவடைந்து விடுவதால் முதற்கடவுள் என்று அழைக்கப்படுகிறார். விநாயகருக்கு விருப்பமான நைவேத்யம் மோதகம், அப்பம், பழம், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழை, நாகப்பழம், விளாம்பழம், தேங்காய், இளநீர், அவரை, துவரை, சுண்டல், கொய்யா, புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம்,
டெல்லியில் வெப்ப அலை தாக்கத்தில் 192 பேர் உயிரிழப்பு…!
டெல்லியில் வெப்ப அலையின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வீடற்ற நிலையில் சாலையில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 192 பேர் கடந்த 9 நாட்களில் உயிரிழந்துள்ளதாக தன்னார்வ தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. குறிப்பாக, டெல்லியில் வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது என ஹோலிஸ்டிக்
பொசன் தினத்தில் 289 கைதிகளுக்கு விடுதலை!
கொழும்பு, – பொசன் போயா தினத்தை முன்னிட்டு 289 கைதிகள் இன்று (21) ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட உள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையில் 19 பேர், மஹர சிறைச்சாலையில் 30 பேர், வாரியபொல சிறைச்சாலையில் 30 பேர் மற்றும் களுத்துறை சிறைச்சாலையில் இருந்து 28 பேர் உட்பட நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள்
உலகில் சிறந்த அப்பாக்கள் இந்த ராசியில் பிறந்தவங்க தான்… யார் யார்னு தெரியுமா..?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் இவர்களின் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் தங்களின் குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டவர்களாகவும், குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் அன்பு மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவில் இருக்கும்.அப்படி உலகில் தலைசிறந்த தந்தைகளாக மாறும்