உண்மையை உடைத்த பாராளுமன்ற உறுப்பினர்…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி அனுமதிப்பத்திரம் மற்றும் 1200 க்கும் மேற்பட்ட மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (01.08) தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் மூன்று இலட்சம் ரூபாவுக்கு மேல் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகத்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு !
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கண்டி முரசுமோட்டை, பரந்தன் ஆகிய பகுதிகளில் இருந்து அனுமதிபத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணிப்பதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கு அமைவாக கடந்த 24 மணி நேர சுற்றிவளைப்பின் மூலம் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. பனங்கண்டி பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும், முரசுமோட்டை மற்றும் பரந்தன் பகுதியில்
நியமிக்கப்பட்ட பதில் பொலிஸ் மா அதிபர்…
பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதிகரித்த பணவீக்கம்…!
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 1.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலை மாதம் 2.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த ஜூலை மாதம் 0.44 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. இதற்கமைய பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மற்றும் உறுதியான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பவற்றின் மூலம் துணையளிக்கப்பட்டு, பணவீக்கமானது எதிர்வரும் காலத்தில்
மற்றொரு ஹமாஸ் பிரமுகர் கொலை…
ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவராகக் கருதப்படும் மொஹமட் தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது. கடந்த 13ம் திகதி காசா பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காசா பகுதியின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தில் இருந்த போது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் மொஹமட் தைஃப் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தருமபுரம் மக்கள் குடியிருப்புகள் பகுதியில் புகுந்த காட்டு யானை!
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் இன்றைய தினம் 01.08.2024 இரவு 1.00 மணியளவில் தருமபுரம் மக்கள் குடியிருப்புகள் பகுதியில் புகுந்த காட்டு யானை. இதனால் வாழ்வாதாரத்திற்காக செய்கை மேற்கொள்ளப்பட்ட இருபதுக்கு மேற்பட்ட வாழை 1/4 சோழச் செய்கை மற்றும் பலன் தரக்கூடிய நிலையிலிருந்த பலாமரத்தின் பலா காய்கள் தென்னை ஒன்றும் முற்று முழுதாக சேதமாக்கி உள்ளதாக
கைது செய்யப்பட்ட கஞ்சிபானை இம்ரான் மற்றும் ரொடும்பே அமில…
லொகு பெட்டியுடன் கஞ்சிபானை இம்ரான் மற்றும் ரொடும்பே அமில ஆகியோர் ரஷ்யாவிற்கு தப்பிச் சென்றருந்த நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரையில் இலங்கை பாதுகாப்பு பிரிவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களம், சர்வதேச பொலிஸாரிடம் இந்த விடயத்தை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளது. இவ்வாறு இம்ரான் மற்றும் ரொடும்பே அமில, மாகந்துரே மதுஷுடன்
அனலைதீவு பிரதான வீதி புனரமைப்பு ஆரம்பம்!
நீண்ட காலமாக மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்திவந்த அனலைதீவு பிரதான வீதி புனரமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த வீதியின் புனரமைப்பு அவசியம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்றுறை நிர்வாகத்தினரிடம் குறித்த பகுதி மக்கள் கொண்டுவந்த நிலையில் அது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினரது கவனத்துக்கு
ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை…
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சியின் பெல்மதுளை இல்லத்தில் சற்றுமுன் கட்சி மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் என பெருமளவானோர் கூடியுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக அறியப்படுகிறது. இதேவேளை இரத்தினபுரி மாவட்ட மொட்டுக்கட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் செல்ல தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர் கைது!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி – துன்னாலை பகுதியில் 9 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 33 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.