Wednesday, June 18, 2025

Daily Archives: Oct 30, 2024

வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு!

வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் புகுந்து ரௌடித்தனத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா மன்னார் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வைத்தியர் அர்ச்சுனா மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை. வைத்தியர் அர்ச்சுனாவுக்கு மனஅழுத்தம், தேர்தல் பரப்புரையில் தீவிரமாக உள்ளார் என அவரது சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர். வைத்தியர்...

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றும் சுமதி தர்மவர்தன என்பவரே, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை...

காதலியை கல்லால் தாக்கி கொலை செய்த நபர் கைது!

தனது காதலியை கல்லால் தாக்கி கொலை செய்த நபர் ஒருவர் இன்று பயாகல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பயாகல, பஹலகொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பயாகல தியலகொட பிரதேச கடற்கரைக்கு இருவரும் வந்திருந்த நிலையில், இருவருக்கிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், இதன்போது குறித்த யுவதியின் தலையில் கல்லால்...

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கெக்கிராவ முதுபெருமகம ஏரிக்கரைக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் கெக்கிராவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இன்று (30) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சில ஆடைகள் மற்றும் ஒரு ஜோடி காலணிகள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கேகாலை, துந்தோட்ட அலவல பிரதேசத்தை சேர்ந்த மதுசங்க அமரசிங்க என்ற 25...

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொலை!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்கு லெபனானில் உள்ள சிடன் நகருக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். அதேநேரம் காசாவில் நேற்றைய தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 132 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தெற்கு லெபனானில் இடம்பெற்ற மோதலில் 33 இஸ்ரேல் இராணுவத்தினர் உயிரிழந்ததாக இஸ்ரேல் ஊடகங்கள்...

கிழக்கு மாகாணத்தில் ஒருவகை மீனினங்கள் கரை ஒதுங்குவதாக அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் ஒருவகை மீனினம் நேற்று மாலை முதல் இன்றுவரை கரை ஒதுங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், மாங்காடு மற்றும் குருக்கள்மடம் உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு மீன்கள் கரை ஒதுங்குவதை அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர். சிறிய அளவிலான கறுப்பு நிற மீனினமே இவ்வாறு கரை ஒதுங்கி இறந்து...

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

2024 பொதுத் தேர்தலில் நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்யுமாறு இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதிவாதிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்திற்கொண்ட பிரீத்தி பத்மன் சுரசேன, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு,...

பெண்களால் எதனையும் சாதிக்க முடியும் – மாற்றத்தை கொண்டுவர ஈ.பி.டி.பியுடன் அணிதிரளுங்கள் – கிளிநொச்சி பெண் வேட்பாளர் திருமதி சுந்தராம்பாள் அழைப்பு!

பெண்களால் சாதிக்க முடியாததென்று எதுவும் கிடையாது. அவர்களது ஆற்றலால் எதனையும் சாதிக்க மட்டுமல்லாது மாற்றியமைக்கவும் முடியும் என்று கூறுவார்கள். இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒவ்வொரு பெண்களும் தமது எதிர்கால வாழ்வியலை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் பலத்தை அதிகரிப்பதற்கு அணிதிரள வேண்டும் என ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதி...

தேர்தல் விதிமுறைகளை மீறிய இருவர் கைது!

தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோமாகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று இன்று (30) அதிகாலையில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போது, ​​ஹோமாகம நகரின் மத்தியில் முச்சக்கரவண்டியில் வந்த இருவர் சுவரொட்டிகளை ஒட்டுவதைக் கண்டு அவர்களை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை, மாபொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என...

பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவர் நியமனம்!

பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட விநாயகமூர்த்தி சகாதேவன் இன்றைய தினம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார, வவுனியா பல்கலைக்கழக வேந்தர் மோகனதாஸ், பனை அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் உட்பட...
- Advertisement -spot_img

Latest News

மன்னாரில் அரச பேருந்தில் பாடசாலை மாணவி மீது ராணுவ சிப்பாய் பாலியல் சேட்டை!

மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து  முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு  அரச பேருந்தில் பயணித்துக்  கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது  அப்பேருந்தில் பயணித்த ராணுவ சிப்பாய் ஒருவர்...
- Advertisement -spot_img