2025ல் போதைப்பொருள் குற்றச்சாட்டில் 1.8 இலட்சம் பேருக்கு மேல் கைது – காவல்துறை தகவல்!!!
2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் அக்டோபர் 15 வரை, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மொத்தம் 1,81,554 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் மிகப் பெரிய அளவில் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி,
-
1,426 கிலோ 543 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன், 56,902 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
14,292 கிலோ 393 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் 57,686 சந்தேகநபர்கள்,
-
32 கிலோ 642 கிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் 86 சந்தேகநபர்கள்,
-
569 கிலோ 985 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் 1,338 சந்தேகநபர்கள்,
-
மற்றும் ஐஸ் போதைப்பொருள் 2,538 கிலோ 866 கிராம் உடன் 65,542 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
காவல்துறை மேலும், நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வலையமைப்புகளை முறியடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
![]()