ஆப்பிள் (Apple) நிறுவனம் 2025-இல் 15-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் 2025 ஆப்பிள் ரசிகர்களுக்கு மிகவும் மாறுபட்ட மற்றும் அசத்தலான ஆண்டாக இருக்கும்.
2025-ல் எதிர்பார்க்கப்படும் தயாரிப்புகள்
– ipad11: புதிய தலைமுறை iPad, மேம்பட்ட AI தொழில்நுட்பங்களுடன் 2025-ல் வெளியாகும்.
– iPad Air M4: M4 சிப்புடன் வரும் மிட்-ரேஞ்ச் டேப்லெட் மேலும் திறமையானதாக இருக்கும்.
– iPhone SE 4: காம்பாக்ட் வடிவமைப்புடன் திறமையான என்ட்ரி-லெவல் ஆப்பிள் மொபைலாக இருக்கும்
– MacBook Air M4: உயர்திறன் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுட்காலத்துடன் வடிவமைக்கப்படும்.
– AirTag 2: மேம்பட்ட டிராக்கிங் வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்புடன் AirTag 2 வெளியாகும்.
iPhone 17 Series
– iPhone 17 மற்றும் 17 Air: புதிய A19 சிப்புடன் வெளிவரும் குறைந்த விலை ஆப்பிள் மொபைல்களாக இருக்கும்.
– iPhone 17 Pro மற்றும் Pro Max: A19 Pro சிப், அதிகப்படியான ரேம், மேலும் நுண்ணிய டைனமிக் ஐலண்ட் வடிவமைப்புடன் வரும்.
மற்ற முக்கிய சாதனங்கள்
– Apple Watch Ultra 3: மேம்பட்ட திடத்தன்மை மற்றும் புதிய சென்சார்களுடன் 2025-ல் வெளியாகும்.
– MacBook Pro M5: மிகுந்த வேகத்தை வழங்கும் M5 சிப் கொண்ட லேப்டாப்.
– iPad Pro M5: தொழில்முறை பயனர்களுக்கான அசத்தலான டேப்லெட்.
2025, ஆப்பிளின் வரலாற்றிலேயே மிகவும் புதுமையான சாதனங்களை கொண்டுவரும் ஆண்டாக இருக்கப்போகிறது.