கிரிபத்கொடையில் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் கைது!
கிரிபத்கொடை- நாஹேன பிரதேசத்தில் உள்ளாடைக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்திகரிக்கும் உணவுகள்..!
பொதுவாக ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் வேலையை உடல் உறுப்புக்கள் செய்கிறது. ஆனாலும் அதற்கு உதவும் வகையில் நாம் அடிக்கடி உணவுகளை எடுத்து கொள்வது அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மனித உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைத்தால் ஆக்ஸிஜன், ஊட்டச்சத்து, ஹார்மோன்கள் ஆகியன சிறந்த முறையில் இயங்க வேண்டும். உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன், ஊட்டச்சத்து, ஹார்மோன்கள்
கல்லீரலில் நச்சை வெளியேற்ற வேண்டுமா? தினமும் இந்த ஒரு நீர் இருந்தா போதும்..!
தற்போது இருக்கும் பழக்க வழங்கங்களின் காரணமாக நாம் நமது ஆரோக்கியத்திற்கு எதிரிகளாக மாறி வருகிறோம். பல மணி நேரம் இருந்தபடியே வேலை செய்வது துரித உணவுகள் எடுத்துக்கொள்வது இதுபோன்ற பழக்க வழக்கங்கள் ஆரோக்கியத்தை கொல்கின்றது. இதற்கு நாம் வீட்டு வைத்தியங்கள் அல்லது நல்ல உணவுகளை உட்கொள்ளுதல் சிறந்தது. உலர் திராட்சை நீர் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான இதயம் தொடர்பான
ரயிலில் மோதி உயிரிழந்த யானைகளுக்கு நீதி கோரி மனு தாக்கல்..!
கல்ஓயா மற்றும் ரொட்டவெவ பகுதிகளில் ரயிலில் மோதி இரண்டு யானைகள் மற்றும் நான்கு குட்டிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் மற்றும் ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் இன்று (03/03/2025) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. யானைகள் ரயில்களில் மோதி இறப்பதைத்
புனித ரமலானில் நோன்பை முறிக்க பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை என்ன?
இஸ்லாமியர்கள் ஒவ்வொரு வருடமும் புனித ரமலானை கொண்டாடுகிறார்கள். இது இஸ்லாமியத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் பலர் விரதம் இருப்பார்கள். நோன்பு நோற்பவர்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை எதையும் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல் இருந்து, இப்தார் நேரத்தில் நோன்பை முடிக்கிறார்கள். இப்தார் பெரும்பாலும் பேரீச்சம்பழத்துடன் தொடங்கப்படுகிறது. இந்த பாரம்பரியம் மத முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்லாமல்,
பங்கு விலைச் சுட்டெண்ணில் வீழ்ச்சி!
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (03) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 311.37 புள்ளிகளால் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 16,167.30 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 1.5
குடு ரோஷனின் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!
25 கிராமுக்கு மேல் ஹெராயின் வைத்திருந்து கடத்தியதற்காக ஒரு பெண் பிரதிவாதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான முப்பத்தாறு வயதுடைய விஜேசிங்க ஆராச்சிலகே நிரோஷாவுக்கே தண்டனை விதிக்கப்பட்டது. இந்த குற்றம் சாட்டப்பட்டவர் மட்டக்குளிய பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடு ரோஷனின் மனைவி என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 27, 2021 அன்று
சிறை சென்ற சிறீதரன் – இந்திய மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடல்.!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை பார்வையிடுமாறு இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையின் பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டம் நடாத்தி வருகின்றனர். இதேநேரம் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துமாறு உள்ளூர் மீனவர்களும் கோரிக்கை
Vantaggi e svantaggi del Drostanolon Propionat
Vantaggi e svantaggi del Drostanolon Propionat Il Drostanolon Propionat è un anabolizzante steroideo utilizzato principalmente nel bodybuilding e nella cultura del fitness. Questo composto è noto per le sue proprietà uniche che possono offrire diversi benefici, ma presenta anche alcuni rischi. In questo
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு வலுசக்தி அமைச்சு செயற்பட வேண்டும்; எம்.பி.ஹிஸ்புல்லா!
நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் மக்களைக் கருத்திற் கொண்டு வலுசக்தி அமைச்சு செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் M.L.A.M ஹிஸ்புல்லா தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். எரிபொருள் விநியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 3 சதவீத கழிவை இரத்து செய்யும் தீர்மானம் தவறானது என ஹிஸ்புல்லா கூறினார். உரிய தரப்பினருடன் கலந்துரையாடியே