Tamil News Channel

Blog Post

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இரத்து செய்யும் விவகாரத்தில் உலக வங்கி தலையிடாது..!

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்துச் செய்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுத்துவிட்டது. இந்நிலையில், உலக வங்கி தலைவர் அஜய் பங்கா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிந்து நதி ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அல்லது அது தொடர்பாக திட்டம் ஏற்படுத்துவதைத் தவிர உலக வங்கிக்கு எந்த பங்கும் இல்லை. உலக வங்கி எப்படி இந்த பிரச்சினையில் தலையிட்டு  சரி செய்யும் என்பது குறித்து பல ஊடகங்களில் பல யூகங்கள் வருகின்றன. ஆனால், அவை அனைத்தும் கற்பனையே. […]

Read More

மே மாத தொடக்கத்திலிருந்து நாட்டுக்கு வருகை வரும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்..!

2025 ஆம் ஆண்டில் மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 10,620 ஆகும். இந்நிலையில், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,676 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 2,445 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 1,573 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,538 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 1,525 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு […]

Read More

இராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்த  இந்திய மத்திய அரசு..!

இந்தியா – பாகிஸ்தானிடையே உச்ச கட்ட போர்ப்பதற்றம் நிலவும் நிலையில், இந்திய  இராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்து  இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எல்லையோரங்களில் பலத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு இராணுவ தளபதிக்கு அறிவுறுத்தியுள்ளது. தற்போது அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, இராணுவத்தில் நிர்வாக ரீதியான மாறுதல்களை மேற்கொள்ளலாம். நாட்டின் பிற பகுதிகளில் உள்ள இராணுவ வீரர்களை எல்லைப்பகுதிக்கு அழைத்துக்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 1948 விதியின் கீழ் 3 ஆண்டுகளுக்கு இந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

Read More

பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க முன் ஆழமாக யோசிக்கவும் – இந்தியா கோரிக்கை..!

பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதற்கு முன் ஆழமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டொலர் கடனை வழங்குவது குறித்து  சர்வதேச நாணய நிதியம் இன்று மதிப்பாய்வு செய்ய உள்ள நிலையில், இதனை இந்தியா தெரிவித்துள்ளது. இதேவேளை  கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்காக வழங்கப்பட்ட நிதி எதற்காக பெறப்பட்டதோ அதற்காக பயன்படுத்தப்பட்டதா,அல்லது வேறு எதற்காகவும் பயன்படுத்தப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பி […]

Read More

8 ஆயிரம் எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்..!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் இரு நாடுகளும் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளத்தில்  பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இதில் பெரும்பாலானவை போலி , தவறான தகவல்கள் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், தவறான தகவல்களை பரப்பும் 8 ஆயிரம் கணக்குகளை முடக்க எக்ஸ் தளத்திற்கு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவையடுத்து அந்த கணக்குகளை எக்ஸ் நிறுவனம் முடக்கியுள்ளதாக […]

Read More

வாழைக்குலை விலையில் வீழ்ச்சி – வாழைச் செய்கையாளர்கள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் பாரிய வீழ்ச்சி காரணமாக செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிலோ கதலி வாழைக்காய் 15 ரூபா தொடக்கம் 20 ரூபாவுக்கு கொள்வனவு இடம்பெறுவதால் தமது உற்பத்தி செலவுக்கேற்ப விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் குருவிகளும் குரங்குகளுமே அவற்றை சாப்பிடுவதாகவும் வாழைச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்த விலையில் கொண்டு சென்று சந்தையில்  கொடுப்பதற்கு கொண்டு செல்வதற்கான செலவே விற்பனை செய்கின்ற வாழைக்குலையில் கிடைக்காத நிலையில் மரத்துடனே அப்படியே விட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். வெளிமாவட்ட வியாபாரிகளும் […]

Read More

மஹிந்த தலைமையில் அவசர அரசியல் கட்சிக் கூட்டம்..!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கட்சிக் கூட்டம் இன்று மாலை 4.00 மணிக்கு ஒன்று கூடுகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அவரது கொழும்பு விஜேராம இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட கட்சியின் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Read More

மாணவியின் மரணத்துக்குக் காரணமான ஆசிரியர் எமக்கு வேண்டாம் – புத்தளத்தில் வெடித்த ஆர்ப்பாட்டம்!

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துக்குக் காரணமாகக் கருதப்படும் ஆசிரியர், புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியர் தங்களுடைய பாடசாலைக்கு வேண்டாமென்று அப்பாடசாலையின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் இன்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் கட்டிடத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மாணவி கல்வி பயின்ற இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக பெரும் போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. உயிரிழந்த மாணவி சம்பந்தப்பட்ட பாடசாலையிலன் ஆசிரியரால் […]

Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More

சுயாதீனமான அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையின் குற்றவியல் நீதி அமைப்பில் தாமதங்களைக் குறைத்து வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சுயாதீனமான அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அரசாங்கத்தின் தற்போதைய தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த முயற்சி, சட்டமா அதிபர் துறையிலிருந்து தனித்தனியாக மாகாண துணை அலுவலகங்களைக் கொண்ட ஒரு வழக்குரைஞர் அமைப்பை உருவாக்க முன்மொழிகிறது. இந்த நடவடிக்கை பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்தவும் குற்றவியல் வழக்குகளைக் கையாள்வதை விரைவுபடுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய அலுவலகத்திற்குத் தேவையான சட்ட கட்டமைப்பை […]

Read More